சினேகாவுக்குப் பிடித்த கதாநாயகன்

சினேகாவுக்குத் தற்போதுள்ள நாயகர்களில் மிகவும் பிடித்தவர் விஜய் சேதுபதியாம். முன்னணி நாயகர்களுடன் நடித்த சினேகா நடிகர் பிரசன்னாவைத் திருமணம் செய்து கொண்டார். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். முதலில் விளம்பரப் படங்களில் நடித்தவர் தற்போது மோகன் ராஜா இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகச் செயல்படுகிறார் சினேகா. இதற்கான படப்பிடிப்பின்போது தற்போதுள்ள நாயகர்களில் பிடித்தவர் யார் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் விஜய் சேதுபதி எனக் கூறினார்.

“விஜய் சேதுபதி தேர்வு செய்யும் கதாபாத்திரமாகட்டும், அதற்கான வசன உச்சரிப்பாகட்டும் வெகு இயல்பாக உள்ளது. அதுதான் எனக்குப் பிடித்துள்ளது. இதை அவரிடமே நேரில் கூறியுள்ளேன்,” என்கிறார் சினேகா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘பிகில்’ படத்தில் நடித்து முடித்ததும் கால்பந்து தொடர்பான அனைத்தும் அத்துபடியாகிவிட்டது,” என்கிறார் வர்ஷா.

12 Nov 2019

விஜய்யை ரசித்த வர்ஷா

‘’இருட்டு’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

12 Nov 2019

துரை: என்னை பிரமிக்கவைத்தார் சுந்தர்.சி

தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்கிறார் நாயகி ராஷ்மிகா. படம்: ஊடகம்

11 Nov 2019

ராஷ்மிகா: கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை