சலிப்பை ஏற்படுத்தாத காட்சி அமைப்பு

‘சைத்தான்’ படத்தில் விஜய் ஆண்டனி எந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘பிச்சைக்காரன்’ வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைத்தான்’. இப்படத்தை பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கியுள்ளார். அருந்ததி நாயர், ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத் திருக்கிறார். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.

தீபாவளி வெளியீடாக வெளி யாக உள்ள இப்படத்தின் முன் னோட்டம் அண்மையில் வெளி யானது. அதில் விஜய் ஆண்டனி வித்தியாசமான தோற்றங்களுடன் நடித்து அனைவரையும் வியக்க வைத்திருந்தார். இந்நிலையில், இப்படத்தில் விஜய் ஆண்டனி எந்தமாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கி றார் என்பதற்கு விடை கிடைத்துள்ளது. அதன்படி, இப்படத்தில் விஜய் ஆண்டனி பிரதீப் என்ற பெயரில் நடித்துள்ளார். தகவல் தொழில் நுட்ப நிபுணரான இவர் மூளைக் கோளாறால் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளாராம். முழுக்க முழுக்க திகில் படமாக இது உருவாகியிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் ரசிகர் களைக் கவரும் என படக் குழுவினர் நம்பிக்கை தெரிவிக் கின்றனர். இப்படத்தின் தமிழக வெளி யீட்டு உரிமையை ஆரோ சினி மாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...
Load next