பாடலாசிரியர் அண்ணாமலை மரணம்

பிரபல திரைப்படப் பாடலாசிரியர் அண்ணாமலை திடீரென மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 49. விஜய் நடிப்பில் வெளிவந்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ பாடலை எழுதியவர் கவிஞர் அண்ணாமலை. மேலும், ‘பிச்சைக்காரன்’ படத்தில் ‘நெஞ்சோரத்தில்’, ‘ஒருவேளை சோற்றுக்காக’ ஆகிய பாடல்களையும், ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் ‘பன்னாரஸ் பட்டுக்கட்டி’ பாடலையும் எழுதியவர்.

கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான ‘புதுவயல்’ என்ற படத்திற்காகத் தனது முதல் பாடலை எழுதிய இவர் இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அண்ணாமலைக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் சிறிது நேரத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. மறைந்த அண்ணாமலைக்கு சுகந்தி என்ற மனைவியும், ஐந்து வயதில் ரித்திகா என்ற மகளும் உள்ளனர். தற்போது 20 படங்களுக்கும் மேல் அவர் பாடல்கள் எழுதி வந்ததாகக் கூறப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், ராதிகா, சரத்குமார், சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

14 Nov 2019

குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்த வருகிறது ‘வானம் கொட்டட்டும்’

நடிக்கத் துவங்கி 12 ஆண்டுகளாகின்றன. இருப்பினும் இப்போதுதான் மனநிறைவு தரும் கதாபாத்திரங்கள் அமைவதாகச் சொல்கிறார் அதிதி ராவ். 

14 Nov 2019

‘பட்டாம்பூச்சிகள் பறக்கும்’