‘ரெமோ’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரெமோ’ படத்தின் தணிக்கை முடிந்துள்ளது. அனைவரும் பார்க்கக் கூடிய படம் என்ற வகையில் ‘யு’ சான்றை வழங்கியுள்ளது தணிக்கைக் குழு. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் 24 ஏஎம் ஸ்டூடியோ தயாரித்துள்ள படம் ‘ரெமோ’. இதில் கீர்த்தி சுரேஷ், ஸ்ரீதிவ்யா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரம்மாண்ட செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் நடந்துள்ளது. வரும் அக்டோபர் 7ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
Load next