சுடச் சுடச் செய்திகள்

அனுஷ்கா: கிசுகிசுக்களுக்காக வருந்தினால் தூங்க முடியாது

கிசு­கி­சுக்­களுக்­காக வருத்­தப் பட்டால் தூங்க முடியாது என்று நடிகை அனுஷ்கா தெரி­வித்து உள்ளார். அண்மை­யில் அளித்த பேட்டி யொன்றில் அனுஷ்கா, “சினி­மா­வில் நடிக்க வந்த புதிதில் என்னைப் ­பற்றி வரும் கிசு­கி­சுக்­களைப் பார்த்­துக் கவலை­பட்டு இருக்­கி­றேன். இதனால் குடும்பத்­தி­னர்­களுக்­கும் மனக்­கஷ்­டம் ஏற்­பட்­டது. ஆனால் இப்போது பக்­கு­வப்­பட்டுவிட்டேன். “புகழ்­பெற்­ற­வர்­கள் இதை எல்லாம் சந்­தித்­து­தான் ஆக வேண்டும் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொள்­கி­றேன். உலகம் என்னை பற்றி என்ன பேசு­கிறது. “மற்­ற­வர்­கள் என்ன நினைக்கி றார்கள் என்று யோசித்­துக்­கொண்டே வாழ்க்கையை ஓட்­டி னால் நிம்மதி இருக்­காது.

“அவ­தூ­று­களுக்­குக் கவலை பட்டால் அழுதுகொண்­டே­தான் இருக்கவேண்டும். சினி­மா­வில் கிசு­கி­சுக்­கள் என்பது சாதா­ர­ணம். சொந்த வாழ்க்கை­யில் அவை தாக்கத்தை ஏற்­படுத்­து­வ­தும் வழக்­கம்தான். எனக்­கும் அவை வலியைக் கொடுத்து இருக்­கின்றன. ஆனால் அது கொஞ்ச நேரம்­தான் இருக்­கும். அதன் பிறகு சாதா­ர­ண­மாகி விடுவேன். “அவற்றை நினைத்துக் கவலை பட்­டுக்­கொண்டு இருந்தால் நிம்மதியாகத் தூங்க முடியாது. “நம் மீது எந்தத் தவறும் இல்­லா­த­போது ஏன் வருத்­தப்­ப­ட ­வேண்­டும்? இந்த உணர்வு எனக்­குள் வந்த பிற­கு­தான் கிசு­கி­சுக் ­களை ஓரம் தள்­ளி­விட்டு நன்றாகத் தூங்க முடிந்தது. “தமிழ், தெலுங்­குப் படங்களில் தீவிர­மாக நடித்­துக்­கொண்டு இருக்­கி­றேன். எனக்கு நல்ல கதை­யம்­சம் உள்ள படங்கள் அமை­கின்றன. “கதா­பாத்­தி­ரங்களும் நடிப்­புத் திறமையை வெளிப்­படுத்­து­வ­தா­கவே இருக்­கின்றன. எல்லா படங்களும் ரசி­கர்­களின் வர­வேற்பைப் பெற்றுள்ளன,” என்று கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon