விக்ரம் பிரபுவைத் தேடும் கும்கியின் குட்டி யானை

பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு அறிமுகமான படம் ‘கும்கி’. யானை சம்பந்தமான கதையை மையப்படுத்தி உருவான இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனால் இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் பிரபுசாலமன். இதிலும் விக்ரம் பிரபுதான் நாயகனாக நடிக்கிறார். மேலும், முதல் பாகத்தின் உச்சக்கட்ட காட்சியில் கொம்பன் யானையைக் கும்கி யானை கொன்றுவிடும். பின்னர் அந்தக் கும்கி யானையும் இறந்துவிடும். ஆனால், ‘கும்கி 2’ஆம் பாகத் தின் கதை இறந்த கும்கி யானை யின் குட்டி யானையைச் சுற்றி அமைந்திருக்கிறது.

முதல் பாகத்தில் கும்கி யானை உயிரோடு இருந்த நேரத் தில் அதற்கு பிறந்திருந்த குட்டி யானை ஒன்று பெரிதாக வளர்ந் திருக்குமாம். தாயோடு அந்த குட்டி யானை ஒன்றுசேர்ந்த ‘ப்ளாஷ்பேக்’ காட்சி இப்படத்தில் இடம்பெறப் போகிறதாம். அதையடுத்து, அந்த குட்டி யானை பெரிதாக வளர்ந்த பிறகு விக்ரம் பிரபுவைத் தேடி வருமாம். அதை அவர் பாசத்தோடு வளர்ப்பது போன்று ‘கும்கி 2’ படம் உருவாகவிருப்பதாகக் கூறப்படுகிறது.

கும்கி படத்தின் ஒரு காட்சியில் விக்ரம் பிரபு.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கதிர் நாயகனாக நடித்துள்ள படம் ‘ஜடா’. இவருடன் இணைந்து ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். படம்: ஊடகம்

17 Nov 2019

புதிய அனுபவத்தை தர வருகிறது ‘ஜடா’

விக்ரம் மகன் துருவ், பனித்தா சந்து. படம்: ஊடகம்

17 Nov 2019

‘ஆதித்ய வர்மா’வுக்கு ‘ஏ’ சான்றிதழ்

நயன்தாராவின் தீவிர ரசிகை என்கிறார் ரகுல் பிரீத்சிங்.

17 Nov 2019

நயன்தாராவைப் பாராட்டும் இளம் நாயகி