இளம் நாயகியின் நாடகம்: இயக்குநர் குற்றச்சாட்டு

சென்னை: திரைப்பட நடிகை அதிதி, தம் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுவதாக அறிமுக இயக்குநர் செல்வ கண்ணன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை யில், தம்மை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென அதி தியைக் கட்டாயப்படுத்தவில்லை எனக் கூறியுள்ளார். “நான் இயக்கி வரும் ‘நெடுநல்வாடை’ படத்தில் அதிதி தான் நாயகி. இரவு முழுவதும் தொலைபேசியில் யாருடனோ பேசுகிறார். இரவு சரியாகத் தூங்காமல் வீங்கிய கண்களுடன் படப்பிடிப்புக்கு வந்தார். “நடிகர் அபி சரவணனைக் காதலிப்பதாகவும், ஒரே வீட்டில் வசிப்பதாகவும் கூறிய அவர், படப்பிடிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாது என்றார். ஆனால் அவர் சொன்னபடி நடக்கவில்லை,” என செல்வ கண்ணன் குறிப்பிட்டுள்ளார். காதல் விவகாரம் வெளிப்பட்டு விடும் என்பதால், தம் மீது அதிதி குற்றம்சாட்டுவதாகக் கூறியுள்ள அவர், அண்மையில் உயிரை மாய்த்துக் கொள்வதாக அதிதி தெரிவித்தது வெறும் நாடகம் என விமர்சித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘சங்கத்தமிழன்’ காட்சியில் விஜய் சேதுபதி, ராஷி கன்னா. படம்: ஊடகம்

15 Nov 2019

நிவேதா: சங்கத் தமிழன் திருப்புமுனையை ஏற்படுத்தும்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் திருமணத்திற்கு தயாராகிவரும் அதேவேளையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் தனது குடும்பத்தினருடன் தலையில் மலர்க்கூடையை சுமந்து சென்று சிறப்புத் தொழுகை நடத்தியுள்ளார். 

15 Nov 2019

தர்காவில் காஜல் பிரார்த்தனை

கௌதம் கார்த்திக் அண்மையில் தேனி மாவட்டத்துக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்தார். பின்னர் அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குச் சென்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். படம்: ஊடகம்

15 Nov 2019

கௌதமை நெகிழவைத்த ஆதரவற்ற குழந்தைகள்