சுடச் சுடச் செய்திகள்

பெண் வேடத்தில் மோகம்

ரசிகர்களைக் கவரவும் சிரிக்க வைக்கவும் பெண் வேடமிட்டு நடிக்க ஆர்வம் காட்டு கிறார்கள் கதாநாயகர்கள். முன்பெல்லாம் ஒரு படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியிலோ அல்லது நகைச்சுவை பகுதிக்காக ஒரு சில நிமிடங்களுக்கோ நாயகர்கள் ரசிகர்களைச் சிரிக்க வைக்க பெண் வேடமிடுவதைப் பார்க்க முடிந்தது. ஆனால் இப்போது நிலைமைத் தலைகீழ் மாற்றம். முழுப் படத்திலுமே பெண் வேடமிட்டு வருவதற்கு பல நாயகர்கள் தயாராக உள்ளனர். தற்போது கதை, கதாபாத்திரங்களின் தேவைக் காக பல மணி நேரம் ஒப்பனைக்காக செல விட்டு பெண்ணாக மாறி நடிப்பதில் இளம் நாயகர்கள் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

திரையுலக ஜாம் பவான்களாக இருந்த எம்ஜிஆரும், சிவாஜிகணேசனும் நாடகங்களில் பெண்ணாக நடித்து உள்ளனர். சிவாஜிகணே சன் நாடக நடிக ராக அறிமுகமானதே சீதை வேடத்தில் தான். ‘குங்குமம்’, ‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’ போன்ற படங்களில் சில காட்சிகளில் அவர் பெண் வேடங்களில் அசத்தியுள்ளார். ரஜினிகாந்த் ‘பணக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பெண்ணும்தான்’ என்ற பாடலில் பெண் வேடமிட்டு சிரிக்க வைத்தார். ‘வீரா’விலும் ஒரு காட்சியில் பெண்ணாக வந்தார். ‘அவ்வை சண்முகி’ படத்தில் கமல் பெண் வேடமிட்டு நடித்தது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த வேடத்துக்காக அவர்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon