அக்காள், தம்பி பாசத்தை விவரிக்கும் புதிய படம்

மீரா ஜாஸ்மினை வைத்து தமிழில் 'கஸ்தூரி மான்' எடுத்த பிரபல மலையாள இயக்குநர் லோகித தாஸின் சீடர் உதய்சங்கரன். இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமிழில் இயக்கும் படம் 'கொஞ்சம் கொஞ்சம்'. தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி என்று மூன்று மாநிலங்களில் துரித கதியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு எடிட்டிங், டப்பிங் என்று இதர பணிகளைத் துவங்கியுள்ளார். "தலைப்பு மட்டுமல்ல, படமும் அப்படித்தான் இருக்கும். அக்காள், தம்பியின் பாசத்தை அழுத்தமாகச் சொல்லும் கதை இது. "பிரியா மோகன் அக்காவாகவும், கோயம்புத்தூரைச் சேர்ந்த கோகும் தம்பியாகவும் நடித்துள்ளனர். குணச்சித்திர வேடத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தும் அப்புக்குட்டி கனமான பாத்திரத்தை ஏற்றுள்ளார். மன்சூர் அலிகான் விஞ்ஞானியாக நடிக்கிறார். அப்புக்குட்டியும் மதுமிதாவும் சேர்ந்து நடனமாடும் 'வாழ்க்கை வட்டம்தான், வயசுப்பட்டம்தான்' எனும் பாடல் அசத்தலாக இருக்கும்," என்கிறார் உதய்சங்கரன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!