இயக்குநர் ஆறுமுகம்: இது தரமான படைப்பு

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்குக் கோடம்பாக்கத்தில் தற்போது ஓரளவு வரவேற்பு கிடைத்து வருகிறது. அண்மையில் வெற்றி பெற்ற ‘ஆண்டவன் கட்டளை’ கூட குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம்தான் என்கிறார்கள். இந்நிலையில், ‘புயலா கிளம்பி வர்றோம்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. ‘சேதுபூமி’, ‘தொட்டால் தொடரும்’, ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘ஆச்சர்யம்’, ‘சும்மா நச்சுன்னு இருக்கு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பட்ஜெட் நாயகன் தமன்தான் இதிலும் நாயகன். கதாநாயகி மதுஸ்ரீ. நண்பர்களோடு இணைந்து கேபிள் டிவி தொடங்குகிறார் நாயகன். கடுமையான உழைப்பும் நண்பர்களின் ஒத்துழைப்பும் அவரை உயர்த்துகிறது. ஆனால் இவரது வளர்ச்சி பிடிக்காத உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் பலவிதமாகத் தொல்லை கொடுக்கிறார். சம்பந்தமில்லாமல் முளைத்த வில்லனை புஜபல பராக்கிரமம் காட்டாமல், புத்தி சாலித்தனத்தால் எப்படி நாயகன் வெல்கிறார் என்பதுதான் படத்தின் கதையாம்.

“இந்தப் படத்தில் கதைன்னு எதுவும் குறிப்பாகக் கிடையாது. சிறுநகரம் ஒன்றில் வசிக்கும் சில மனிதர்கள், பிழைப்புக்காக அவர்கள் செய்யும் போராட்டம்தான் இந்தப் படம்,” என்கிறார் இயக் குநர் ஜி.ஆறுமுகம். “முதல் 3 நாட்களிலேயே பல கோடிகளைக் குவிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட நடிகர்களோ, தொழில்நுட்பக் கலைஞர்களோ எங்கள் படத்தில் இல்லை. “இளைஞர்களைச் சுண்டி இழுக்கிற கனவுக்கன்னிகளும் இல்லை. இப்படி நிறைய விஷயங் கள் ‘இல்லை’ என்றாலும், பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் உண்டு. நல்ல படம் என்று ரசிகர் கள் மகிழ்ச்சியுடன் சொல்லும் வகையில் பல அம்சங்கள் உள்ளன. “இப்போதுள்ள சமூக சூழலில் பட்டப்படிப்பை முடித்தவர்களும் கூட கும்பகோணம் டிகிரி காபி கடையில் வேலை பார்க்கிறார்கள். தகுதி இருந்தும் கூட தேடலோ தொலைநோக்குப் பார்வையோ இல்லாமல் ஏராளமான இளைஞர் கள் வாழ்க்கையில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். டாஸ்மாக் மதுக் கலாசாரம் அவங்களை சிந்திக்கவிடாமல் கட்டிப்போட் டிருக்கிறது.

“என் சம காலத்தின் இந்த அவலம் எப்படித் தீரும் என்று எனக்கும் பெரும் குழப்பம் உள் ளது. என்ன தீர்வு என யோசித்து, தேடியபோது கிடைத்த விடையைத் தான் இந்தப் படமாக எடுத்துள் ளேன். இளையர்கள் சொந்தக் காலில் நிற்பதுதான் எதிர்காலத் துக்குப் பாதுகாப்பு என்று சொல்ல முயற்சி செய்துள்ளேன். அப்படி நிற்கும்போது என்னென்ன சவால் களை எதிர்கொள்ள வேண்டி யிருக்கும் என்றும் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். “இந்தப் படத்தைத் தங்கச் சிலையாகக் கருதி கவனத்துடன் செதுக்கிக் கொண்டிருக்கிறேன். நாயகனும், நாயகியும் கடற்கரை யில் ஆட்டம் போடும் பாடல் காட்சி இளவயது ரசிகர்களை வெகுவாகக் கவரும். “தரமான இப்படம் விரைவில் வெளியீடு காணும் என எதிர் பார்க்கலாம்,” என்கிறார் இயக்கு நர் ஆறுமுகம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய, 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள ஆடம்பர வீட்டை வாங்கியுள்ளாராம் பிரியங்கா சோப்ரா.  கோப்புப்படம்: ஊடகம்

20 Nov 2019

ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா

‘ஆஹா கல்யாணம்’ என்ற படத்தில் நானியுடன் இணைந்து நடித்த வாணிகபூர். படம்: ஊடகம்

20 Nov 2019

கவர்ச்சி படத்தால் சிக்கலில் சிக்கிய வாணி கபூர்