பெற்றோருக்கு பாடம் சொல்ல வரும் புதிய படம் ‘பரமு’

ஏமாறாதே ஏமாற்றாதே என்ற கருத்தை மையக் கருவாக வைத்துத் தயாராகும் புதிய படம் ‘பரமு’. இப்படத்தின் கதை, திரைக் கதை, வசனங்களை எழுதி இயக்குபவர் என்.மாணிக்கவேலு. கதாநாயகனும் இவரே. சித்ரா எனும் புதுமுகம் நாயகி யாக அறிமுகமாகிறார். சந்தியா, ரஞ்சித், கார்த்தி, திருப்பாச்சி பென்ஜமின், கோவை செந்தில் ஆகியோரும் நடிக்கிறார்கள். “ஏழை மாணவன் ஒருவனுக் குக் கல்லூரியில் பயிலும் நல்ல வாய்ப்புக் கிடைக்கிறது. தொடக் கத்தில் கல்வியில் கவனம் செலுத்துகிறான்.

“கல்லூரியில் அனைவரிடமும் சகஜமாகப் பழகுகிறான். கூடா நட்புக் காரணமாக அவன் திசை மாறுகிறான். பணத் தேவைக் காகத் தன் குடும்பத்தை ஏமாற்றுகிறான். அதன் விளைவு என்ன என்பதே கதை. “ஏமாறாதே ஏமாற்றாதே என்ற மைய கருவே கதை. பாசமான மகனை நம்பி ஏமாறும் பெற்றோர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இது இருக்கும். “சேலம், ஆட்டையாம்பட்டி, ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். படப்பிடிப்புகள் முடிவடைந்தது. தற்போது பின் னணி இசை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

‘பரமு’ படத்தின் ஒரு காட்சியில் மாணிக்கவேலு, சித்ரா, சந்தியா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் எப்போதுமே வெளிப்படையாகப் பேசவே விரும்புவேன்,” என்கிறார் பிரியா ஆனந்த். படம்: ஊடகம்

19 Nov 2019

பிரியா: வெளிப்படையாகப் பேசுவதையே விரும்புகிறேன்

கார்த்தி தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘தம்பி’.

19 Nov 2019

அண்ணி ஜோதிகாவுக்கு தம்பியாக கார்த்தி நடிக்கும் படம் ‘தம்பி’

விருதுகள் கலைஞர்களுக்கு மேலும் சிறப்பாக உழைக்கவேண்டும் எனும் ஊக்கத்தைத் தருவதாகச் சொல்கிறார் நடிகை அதிதி ராவ்.  படம்: ஊடகம்

19 Nov 2019

‘விருதுகள் உற்சாகம் தரும்’