விஜய் சேதுபதி: ஆர்ப்பாட்டம் வேண்டாம்

‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ‘றெக்க’ படத்தின் மூலம் மீண்டும் ஒரு வெற்றிக்குத் தயாராகி வருகிறார் விஜய் சேதுபதி. தொடர்ச்சியாகப் படங்கள் வெளியானாலும், வெற்றி பெற்றாலும், வழக்கம்போல் அடக்கத்துடன் பேசுகிறார். ‘றெக்க’ படத்தின் மூலம் நீங்களும் வெற்றி நாயகன் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறீர்களே? ‘றெக்க’ படம் மட்டுமல்ல, ‘ஆண்டவன் கட்டளை’, ‘தர்மதுரை’ படங்களும் வணிக ரீதியிலான படங்கள்தான். ‘றெக்க’ படத்தில் காதலைச் சேர்த்துவைக்கும் நபராக நான் நடித்திருக்கிறேன். அதற்கு ஒரு காரணம் வேண்டுமே! அதனால் காதல் ‘ப்ளாஷ் பேக்’ இருக்கும். அதை வைத்துத்தான் இக்கதை நகரும்.

“இதில் அதிரடி வசனங்கள் பேசும்போது, இயக்குநரிடம் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாகக் கூறினேன். ‘உங்களுடைய வசனங் களே வலுவாக இருக்கின்றன. அவற்றை நான் சத்தமாகப் பேசினால், மிகவும் வலுவாக அமைந்துவிடும் என்பதால் சத்தம் குறைவாகப் பேசுகிறேன்’ என்று சொன்னேன். “ஒரு பிரச்சினையை முடிக்கப்போய் இன் னொரு பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறான். அது நாயகனைப் பெரும் பிரச்சினையில் சிக்க வைக்கிறது. எப்படி அனைத்துப் பிரச்சினைகளில் இருந்தும் நாயகன் வெளியே வந்தான் என்பது தான் இந்தப் படம்.” கதாநாயகன் என்ற உங்களது பயணத்தைத் திரும்பிப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது? “நான் சொந்த வீடு கட்டிவிட்டுத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் முதலில் இருந்தேன். ஆனால் நான்தான் முதலில் திருமணமே செய்தேன். இப்படி எல்லாம் நம்முடைய வாழ்க்கை அமைய வேண்டும் என்று எண்ணிய எதுவுமே நடக்க வில்லை. பிறகு வாழ்க்கையின் போக்கில் பயணிக்கத் தொடங்கினேன்.

“இது எப்படி நடந்தது, வாழ்க்கை இன்னும் எங்கே கொண்டு போகப்போகிறது என்கிற எந்த சிந்தனையுமே இல்லை. இந்த அனுபவத்தில் நானே மனது, குணம் உள்ளிட்ட விஷயங்களில் நிறைய மாறியுள்ளேன் என்பது தெரிகிறது. என் வாழ்க்கை எனக்கே ஒரு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.”

Loading...
Load next