மனசாட்சியை நம்புகிறேன் - சிவகார்த்திகேயன்

மனசாட்சியை நம்பியே தாம் செயல்படுவ தாகக் கூறுகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். கடந்து வந்த பாதையை எப்போதுமே மறக்கக் கூடாது என்றும் அண்மைய பேட்டியில் தெரிவித்துள்ளார். ‘ரெமோ’வுக்கான உங்களுடைய பங்களிப்பு...?

“எனக்கு ‘ரெமோ’ கதையைப் பாக்கி யராஜ் கண்ணன் சொன்னபோது, அது என்னை மிகவும் ஈர்த்தது. அதேசமயம் மிக வும் பயந்தேன். நமது உழைப்பு என்பதெல்லாம் கடந்து இந்தப் படம் சாதாரணமாக இருக்க வேண்டும் என நினைத்தேன். படத் துக்குப் பெரிய மெனக்கெடல் இருந்தாலுமே சாதாரணமான காதல் கதைதான். காதலுக் காக ஒருவன் எந்த எல்லை வரை போவான் என்பது தான் இப்படத்தின் மைய மாக இருந்தது.

“முதலில் நர்ஸ் உடை போட்டுப் பார்த்தபோது, எடை அதிகமாக இருந் தேன். பிறகு இந்தக் க தா பா த் தி ர த் தி ல் நடிக்க நம்மை முதலில் மாற்ற வேண்டும் என முடிவு செய்து உடற் பயிற்சி செய்வதை நிறுத்தினேன். “உடல் பரும னைக் குறைக்க வேண்டும் என முடிவு செய்து அதன் படியே குறைத்தேன். பிறகு ‘விக்’ ஒன்றை வைத்துப் பார்த்தார்கள். பேய் மாதிரியே இருந்தது. “அதன் பிறகு முகத்தை மெருகேற்றி, படப்பிடிப்புக் கான பணிகளைத் தொடங்கி னோம்.” உங்களது தற்போதைய நிலையில், புது முயற்சிகள் அவசியம் என்று நினைக்கிறீர்களா? “நான் அப்படிப் பார்க்கவில்லை. இயக்குநர் சொன்ன கதை எனக்குச் சரியாக இருந்தது. இயக்குநர் இதே கதையை ஒரு அடிதடி, திகில் பாணியில் சொல்லியிருந்தால் இச்சமயத்தில் இது நமக்குத் தேவையா என யோசித்திருப்பேன். இந்தப் பெண் வேடம் என்பது இப்போதுதான் பண்ண முடியும். இதைவிட்டால் பின்பு வரும் காலங் களில் என்னால் செய்ய முடியாது.

“நம்மால் முழு நகைச்சுவைப் படம்தான் பண்ண முடியும் என்ற நம்பிக்கையில் மட்டுமே திரையுலகிற்குள் வந்தேன். இப்போது, இந்த மாதிரியான பரிசோதனை முயற்சிகள் தான் என்னை முழுமைப்படுத்தும் என நினைக்கிறேன். அடுத்து மோகன் ராஜா சார் இயக்கத்தில் நடிக்க உள்ளேன். வெவ்வேறு இயக்குநர்களின் படங்களில் நடித்து முழுமைப்படுத்தப்படுவேன் என நம்புகிறேன்.

“‘ரெமோ’ ஒரு சவாலான படம் என்பது மட்டும் தெரியும். படம் ஆரம்பிப்பதற்கு முன்பு சரியாகப் பண்ணிவிட வேண்டுமே என்ற பயம் தான் என்னை இந்தளவுக்குக் கொண்டு வந்தி ருக்கிறது என்று நம்புகிறேன்.”

இப்பகுதியில் மேலும் செய்திகள்