அழகு சிலையாக அசத்துகிறார் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் இதுவரை குறைந்த செலவிலான படங்களில் நடித்து வந்தார். தற்பொழுது அவர் நடித்து வெளிவந்திருக்கும் ‘ரெமோ’ படம் பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. சிவகார்த்திகேயனுக்குப் பெரிய நடிகராக வேண்டு ம் என்ற கனவு. ஆனால் அவருக்குச் சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கே.எஸ்.ரவிக்குமார் தன் படத்திற்கு நாயகனைத் தேடுகிறார் என்பதை அறிந்து, அவரிடம் சென்று வாய்ப்புக் கேட்கிறார். முதலில் காதல் காட்சியில் சிவகார்த்திகேயனை நடிக்கச் சொல்கிறார். ஆனால், அவருக்கோ ‘ரொமான்ஸ்’ சுத்தமாக வரவில்லை. அதனால் கே.எஸ்.ரவிக்குமார் சிவகார்த்திகேயனை நிராகரிக்கிறார். தான் அடுத்ததாக எடுக்கும் ‘அவ்வை சண்முகி’ படத்தில் நாயகன் பெண் வேடத்தில் நடிப்பதாக சிவகார்த்திகேயனிடம் சொல்கிறார். அந்தப் படத்திலாவது வாய்ப்பு வாங்கிவிடவேண்டும் என்று சிவகார்த்திகேயன் முடிவெடுக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமாரைப் பார்த்துவிட்டுத் திரும்பிவரும் வேளையில் கீர்த்தி சுரேஷை பார்க்கும் சிவகார்த்திகே யனுக்குள் காதல் அரும்புகிறது. எனவே அவரை எப்படியாவது காதலிக்க வைக்கவேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் பின்னாலேயே சுற்றுகிறார். ஒரு சமயத்தில் அவரைத் தேடி அவர் வீடு வரைக்கும் போகும் சிவகார்த்திகேயன், அங்கு கீர்த்தி சுரே‌ஷுக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடப்பதைப் பார்த்து அதிர்ச்சியுறுகிறார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் எப்போதுமே வெளிப்படையாகப் பேசவே விரும்புவேன்,” என்கிறார் பிரியா ஆனந்த். படம்: ஊடகம்

19 Nov 2019

பிரியா: வெளிப்படையாகப் பேசுவதையே விரும்புகிறேன்

கார்த்தி தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘தம்பி’.

19 Nov 2019

அண்ணி ஜோதிகாவுக்கு தம்பியாக கார்த்தி நடிக்கும் படம் ‘தம்பி’

விருதுகள் கலைஞர்களுக்கு மேலும் சிறப்பாக உழைக்கவேண்டும் எனும் ஊக்கத்தைத் தருவதாகச் சொல்கிறார் நடிகை அதிதி ராவ்.  படம்: ஊடகம்

19 Nov 2019

‘விருதுகள் உற்சாகம் தரும்’