புதிய படத்தை வெளியிடத் தடை

‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தை வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், விடுதலைப்புலிகள் அமைப் பைச் சேர்ந்த பலர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அச்சமயம் ஷோபா என்ற இசைப்பிரியா என்னும் இளம்பெண் இலங்கை ராணுவத்தின ரால் கொடூரமாகப் பாலியல் பலாத் காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொடூர சம்பவத்தை மைய மாக வைத்து, கே.கணேசன் என்பவர் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெய ரில் ஒரு திரைப்படத்தை இயக்கி யுள்ளார். இந்தப் படத்தை ஏ.சி.குருநாத் செல்லசாமி தயாரித்துள்ளார்.

இப்படத்தில் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கொடூரக் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்தப் படத்தைப் பொதுமக்களுக்குத் திரையிட்டுக் காட்ட அனுமதிக்க முடியாது என்று தணிக்கை வாரியம் கடந்த ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவையும் தணிக்கை வாரிய மேல்முறையீட்டுக் குழு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் அப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, போர்க் களத்தில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் தாய் டி.வேதரஞ்சனி, மூத்த சகோதரி தர்மினி வாகிசன் ஆகியோர் இந்தப் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் எல்லாம் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தன. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “இந்தப் படத்தில் கொடூர காட்சிகள் இடம்பெற்றுள்ள தாகக் கூறி தணிக்கைச் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கௌதம் கார்த்திக் அண்மையில் தேனி மாவட்டத்துக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்தார். பின்னர் அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குச் சென்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். படம்: ஊடகம்

15 Nov 2019

கௌதமை நெகிழவைத்த ஆதரவற்ற குழந்தைகள்

‘சங்கத்தமிழன்’ காட்சியில் விஜய் சேதுபதி, ராஷி கன்னா. படம்: ஊடகம்

15 Nov 2019

நிவேதா: சங்கத் தமிழன் திருப்புமுனையை ஏற்படுத்தும்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் திருமணத்திற்கு தயாராகிவரும் அதேவேளையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் தனது குடும்பத்தினருடன் தலையில் மலர்க்கூடையை சுமந்து சென்று சிறப்புத் தொழுகை நடத்தியுள்ளார். 

15 Nov 2019

தர்காவில் காஜல் பிரார்த்தனை