காத்திருக்கும் கதாநாயகி

நல்ல கதை அமையும்போது சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நடிக்கத் தயாராக உள்ளதாக நடிகை ஸ்ரீதிவ்யா தெரிவித் துள்ளார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடி யாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இந்தப் படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டதுடன், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இப்படத்தின் வெற்றியால் மீண்டும் இருவரும் இணைந்து ‘காக்கி சட்டை’ படத்தில் நடித்தனர்.

அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ் நடித்தார்கள். அடுத்து நயன்தாரா வுடன் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், மீண்டும் சிவகார்த்தி கேயனுடன் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு ஸ்ரீதிவ்யா பதிலளித் துள்ளார்.

“ஒரு படத்துக்கான கதையைத் தயார் செய்யும் போதே அந்தப் படத்தில் யார் யாரை நடிக்க வைக்கலாம் என்பதை இயக்குநர்கள் முடிவு செய்துவிடுகிறார் கள். எனவே, நான் நடிக்கும் வகையில் பொருத்தமான கதை அமையும்போது, நிச்சயம் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நடிப்பேன்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்