தல வளர்ச்சிக்கு மகிழ்ச்சி

“யாருமே அஜித்தைப் பற்றி பேசாத சமயத்தில் அவருடைய படத்தின் கட் அவுட்டை வைத்து ‘தல தல’ என்று கத்தினேன். இப்போது அவரைப் பற்றி எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். அதனால் இனிமேல் என்னுடைய படங்களில் ‘தல’ பற்றி பேசத் தேவையில்லை. அவருடைய வளர்ச்சிக்கு மகிழ்ச்சி,” என்று கூறியுள்ளார் சிம்பு. இதுதான் தற்போது அஜித் சி கர ர்களி டையே பெரும்கோபத்தை வரவழைத்துள்ளது. சிம்பு தனது கருத்து குறித்து விளக்கம் அளிக்கும்விதமாக காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டார். 

அதில், “நான் துவக்கத்தில் ரஜினி சாரின் ரசிகனாக இருந்தேன். அவரைக் கொண்டாட நிறைய பேர் இருந்த சமயத்தில் அஜித்தைக் கொண்டாடுவதில் நான் முதல் ஆளாக இருக்க வேண்டும் என்பதற்காகவே எனது படங்களில் அவரது பெயரைப் பயன்படுத்தினேன். “நான் பேசியதைத் தவறாகப் புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல,” என விளக்கம் அளித்துள்ளார் சிம்பு.

இப்பகுதியில் மேலும் செய்திகள்