குழந்தைகள் பார்த்து மகிழ்ந்த புதிய படம்

‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு குழந்தைகளை மிக வும் கவர்ந்துள்ளதாகக் கூறப்படு கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ரெமோ’. இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர் கொண்டாலும் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகே யன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் நடத்திவரும் அறக்கட்டளையில் பயிலும் குழந்தைகளுக்கு இந்தப் படத்தை பிரத்யேகமாக திரை யிட்டுக் காண்பித்துள்ளனர்.

படம் பார்த்த குழந்தைகள் அனைவரும் சிவகார்த்திகேயனின் நடிப்பை விரும்பி ரசித்ததாக தெரிவித்தனர். குறிப்பாக சிவ கார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்த காட்சிகளைக் குழந்தை கள் வயிறு குலுங்க சிரித்துப் பார்த்து ரசித்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, அனிருத் இசை என பிரம்மாண்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் பணியாற்றியுள் ளனர். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ஆர்.டி.ராஜாவின் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் ‘ரெமோ’ படம் ரசிகர்கள், குறிப்பாக குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தின் வசூல் சிவகார்த்தி கேயனை வெகுவாகக் திருப்தி அடைய வைத்துள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் எதிர்பார்த்ததைவிட இந்தப் படம் அதிக வசூலைக் கண்டுள்ளதாம். மலேசியாவில் பலத்த வரவேற்பு கிடைத்திருப்பதாகக் கூறப்படு கிறது. எனினும் படம் குறித்த எதிர் மறை விமர்சனங்களில் கூறப் பட்டுள்ள கருத்துகளை எல்லாம் கவனித்து, அடுத்தடுத்த படங்களில் குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்ய அவர் முடிவு எடுத்துள்ளதாகக் கேள்வி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கதிர் நாயகனாக நடித்துள்ள படம் ‘ஜடா’. இவருடன் இணைந்து ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். படம்: ஊடகம்

17 Nov 2019

புதிய அனுபவத்தை தர வருகிறது ‘ஜடா’

விக்ரம் மகன் துருவ், பனித்தா சந்து. படம்: ஊடகம்

17 Nov 2019

‘ஆதித்ய வர்மா’வுக்கு ‘ஏ’ சான்றிதழ்

நயன்தாராவின் தீவிர ரசிகை என்கிறார் ரகுல் பிரீத்சிங்.

17 Nov 2019

நயன்தாராவைப் பாராட்டும் இளம் நாயகி