ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும்’

‘குற்றம் கடிதல்’ பட இயக்குநர் பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா தற்போது நடித்துவரும் படம் ‘மகளிர் மட்டும்’. பிரம்மா இயக்கத்தில் வெளியாகி தேசிய விருதை வென்ற திரைப்படம் ‘குற்றம் கடிதல்’. அதையடுத்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். முழுக்க முழுக்க பெண்களின் பிரச்சினைகளை அலசும் படமாக திரைக்கதை அமைத்திருக்கிறாராம். இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஜோதிகா நடிக்க, படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. முன்னதாக ஜோதிகாவுக்கும், உடன் நடிப்பவர்களுக்கும் நடிப்புப் பயிற்சி அளித்து வந்தார் பிரம்மா. சூர்யாவின் ‘2டி’ நிறுவனம் மற்றும் ‘கிரிஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். லிவிங்ஸ்டன், நாசர், ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோரும் நடிக்கிறார்கள். பெயரிடப்படாமல் இருந்த இப்படத்துக்கு தற்போது ‘மகளிர் மட்டும்’ என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் முதல் தோற்ற சுவரொட்டியை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் எப்போதுமே வெளிப்படையாகப் பேசவே விரும்புவேன்,” என்கிறார் பிரியா ஆனந்த். படம்: ஊடகம்

19 Nov 2019

பிரியா: வெளிப்படையாகப் பேசுவதையே விரும்புகிறேன்

கார்த்தி தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘தம்பி’.

19 Nov 2019

அண்ணி ஜோதிகாவுக்கு தம்பியாக கார்த்தி நடிக்கும் படம் ‘தம்பி’

விருதுகள் கலைஞர்களுக்கு மேலும் சிறப்பாக உழைக்கவேண்டும் எனும் ஊக்கத்தைத் தருவதாகச் சொல்கிறார் நடிகை அதிதி ராவ்.  படம்: ஊடகம்

19 Nov 2019

‘விருதுகள் உற்சாகம் தரும்’