விவசாயம் குறித்துப் பேச வருகிறது ‘கடலை’

சகாய சுரேஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘கடலை’. இதில் மாகாபா.ஆனந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இது முழு நீள நகைச்சுவைப் படமாக உருவாகிறது என்றாலும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படைப்பாகவும் இருக்குமாம். கடந்த 2015ல் படப்பிடிப்பு தொடங்கிய போது ‘தீபாவளி துப்பாக்கி’ என்றுதான் தலைப்பு வைத்திருந்தனர். பின்னர் விவசாயத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்க வேண்டும் என்பதற்காக ‘கடலை’ என்று பெயர் மாற்றினராம். “அதற்கும் முன்னதாக ‘நெல்’ என்ற தலைப்பையும் கூட யோசித்தோம். ஆனால் ரசிகர்கள் இதைக் கலைப் படமாகக் கருதிவிட வாய்ப்புள்ளது என்று பலரும் கூறினர். எனவே தான் ஜனரஞ்சகமாக ‘கடலை’ எனத் தலைப்பு வைத்தோம். நான் எதிர்பார்த்ததைவிட படம் மிகச் சிறப்பாக உருவாகி உள்ளது. அனைத்துத் தரப்பு ரசிகர்களும் இப்படத்தை நிச்சயமாக விரும்புவர்,” என்கிறார் இயக்குநர் சகாய சுரேஷ்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்