கலங்கிய கதாநாயகன்

மிகக் கடினமாக உழைத்ததன் பலனா கவே திரையுலகில் தாம் முன்னேற்றம் கண்டுள்ளதாக நடிகர் சிவகார்த்தி கேயன் கூறியுள்ளார். ‘ரெமோ’ பட விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தாம் யாருடைய வெற்றியையும் திருடவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், அப்படத்தில் பணியாற்றிய அனைத்துக் கலை ஞர்களும் கலந்துகொண்டனர். சிவ கார்த்திகேயன் சில விஷயங்களை மனம் திறந்து பேசினார். “இந்தப் படத்தில் உழைத்த தொழில் நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனை வருக்கும் நடிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படத் தின் மூலமாக அனைவரையும் திருப்திப் படுத்தும் ஒரு பொழுதுபோக்குப் படத் தைக் கொடுக்க முயற்சி செய்திருக் கிறோம். இம்முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறோமா என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும். “இதுவரையில் யாரும் எடுக்காத கதை என்று சொல்ல முடியாது. அதே சமயம் மக்கள் ரசிக்கும்படியான யதார்த்தமான படம் ‘ரெமோ’ என்று தயங்காமல் சொல்லலாம். இதை உரு வாக்க முழுமையாக உழைத்துள்ளோம். “பொதுவாக ஒரு படத்தில் பயணித்த அனைவருக்குமே, ‘இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாமே’ என்று சொல்லத் தோன்றும். ஆனால், அதைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு நிறை வாக தன் பங்களிப்பைச் செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘பிகில்’ படத்தில் நடித்து முடித்ததும் கால்பந்து தொடர்பான அனைத்தும் அத்துபடியாகிவிட்டது,” என்கிறார் வர்ஷா.

12 Nov 2019

விஜய்யை ரசித்த வர்ஷா

‘’இருட்டு’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

12 Nov 2019

துரை: என்னை பிரமிக்கவைத்தார் சுந்தர்.சி

தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்கிறார் நாயகி ராஷ்மிகா. படம்: ஊடகம்

11 Nov 2019

ராஷ்மிகா: கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை