விஷாலுடன் நடிக்க மறுத்த ப்ரீத் சிங்

விஷால் அதிக சம்ப­ளம் கொடுக்கச் சம்­ம­தித்­தும் ரகுல் ப்ரீத் சிங் ‘துப்­ப­றி­வா­ளன்’ படத்­தில் இருந்து வெளி­யே­றி­யுள்­ளார். கால்‌ஷீட் பிரச்­சினை­யால் வெளி­யே­றி­யதாகக் கூறப்படுகிறது. அவ­ருக்­குப் பதிலாக மலையாள படங்களில் நடிக்­கும் அனு இம்­மா­னு­வேலை ஒப்­பந்தம் செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது. ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷா­லுக்கு ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் அதிக தொகையைச் சம்ப­ள­மாக கேட்­டா­ராம். விஷாலும் அதைக் கேட்டு அதிர்ச்சி அடை­யா­மல் கொடுக்க சம்­ம­தித்­தும் அவர் இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங் ஏ.ஆர். முரு­க­தாஸ் இயக்­கத்­தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்­தில் நடித்­துக் கொண்­டி­ருக்­கிறார். மேலும் கை நிறைய தெலுங்குப் படங்கள் வைத்­துள்ள அவருக்கு இப்படத்தில் நடிக்க கால்‌ஷீட்தான் பிரச்சினை என்று கூறப்படுகிறது. இது தவிர ஹரி இயக்­கத்­தில் விக்ரம் நடிக்க உள்ள சாமி படத்­தின் இரண்டாம் பாகத்­தில் அவ­ருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்­கவுள்ளதும் குறிப்பிடத் தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் எப்போதுமே வெளிப்படையாகப் பேசவே விரும்புவேன்,” என்கிறார் பிரியா ஆனந்த். படம்: ஊடகம்

19 Nov 2019

பிரியா: வெளிப்படையாகப் பேசுவதையே விரும்புகிறேன்

கார்த்தி தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘தம்பி’.

19 Nov 2019

அண்ணி ஜோதிகாவுக்கு தம்பியாக கார்த்தி நடிக்கும் படம் ‘தம்பி’

விருதுகள் கலைஞர்களுக்கு மேலும் சிறப்பாக உழைக்கவேண்டும் எனும் ஊக்கத்தைத் தருவதாகச் சொல்கிறார் நடிகை அதிதி ராவ்.  படம்: ஊடகம்

19 Nov 2019

‘விருதுகள் உற்சாகம் தரும்’