டி.ராஜேந்தர்: எங்கள் நடனத்தை மக்கள் ரசிப்பார்கள்

தமிழைவிட தெலுங்குப் படங்களில் ஓய்வில்லாமல் நடித்துகொண்டு இருக்­கிறார் சக­ல­க­லா­வல்­ல­வரான டி.ராஜேந்தர்.­­­ த­மிழ் சினி­மா­வில் 90களில் எப்படி பர­ப­ரப்­பாக சுறு­சு­றுப்­பாக படங்களில் நடித்­துக்கொண்டு இருந்தாரோ அதைப்­போ­லவே இன்றும் இருக்கிறார் டி.ஆர். தற்போது கே.வி.ஆனந்த் இயக்­கத்­தில் டி.ரா­ஜேந்த­ரும் விஜய் சேது­ப­தி­யும் இரட்டை கதாநாயகன் கதையம்சம் உள்ள படத்­தில் நடித்து வரு­கின்ற­னர். தெலுங்­குப் ­பட வேலையில் இருந்த டி.ராஜேந்த­ரி­டம் தமிழில் அவர் நடிக்கும் படத்தைப் பற்றி கேட்கப் பட்டது. அப்போது, “இயக்­கு­நர் கே.வி. ஆனந்த் எனக்­கும் விஜய் சேது­ப­திக்­கும் சமமான கதாபாத்திரத்தை உரு­வாக்கி இருக்­கிறார். என் கதா­பாத்­தி­ரம் பற்றிச் சொல்­வதற்கு எனக்கு ஆசைதான் ஒரு படத்­துக்­கு தலைவர் அதன் இயக்­கு­நர் ­தான் அவரை­ மீறி நான் வெளியே சொன்னால் அது நாக­ரிக­மாக இருக்­காது.

“தெலுங்குப் படங்களில் வேலை பார்ப்­ப­தால் அடிக்­கடி ஹைத­ரா­பாத் சென்று கொண்டு இருக்­கி­றேன். விரைவில் படப்­ பி­டிப்பு தொடர்­பாக ஆஸ்­தி­ரே­லியா செல்ல இருக்­கி­றேன். “இதுவரை இல்லாத அள­வுக்கு என் கதாபாத்திரத்தை வேறொரு கோணத்­தில் வடி­வமைத்து இருக்­கிறார் இயக்­கு­நர் கே.வி.ஆனந்த். “நானும் விஜ­ய்­ சே­து­ப­தி­யும் இணைந்து நட­ன­மா­டும் பாடல் காட்­சியை அவர் பட­மாக்க போகிறார். “இந்தப் பாடல் மக்­களி­டம் பெரிய வர­வேற்பைப் பெறும் என்கிற நம்­பிக்கை எனக்கு இருக்­கிறது,” என்று கூறினார் டி.ஆர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய, 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள ஆடம்பர வீட்டை வாங்கியுள்ளாராம் பிரியங்கா சோப்ரா.  கோப்புப்படம்: ஊடகம்

20 Nov 2019

ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா

‘ஆஹா கல்யாணம்’ என்ற படத்தில் நானியுடன் இணைந்து நடித்த வாணிகபூர். படம்: ஊடகம்

20 Nov 2019

கவர்ச்சி படத்தால் சிக்கலில் சிக்கிய வாணி கபூர்