இந்திப் படத்தின் மறுபதிப்பில் திரிஷா

‘என்.ஹெச் 10’ படத்தின் தமிழ் மறுபதிப்பில் அனுஷ்கா சர்மா கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. இந்தியில் நவ்தீப் சிங் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடித்து வெற்றி பெற்ற படம் ‘என்.ஹெச் 10’. இப்படத்தை 6 பேர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் தமிழில் மறுபதிப்பு செய்யப்படுகிறது. இதில் அனுஷ்கா சர்மா கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. இந்த மறுபதிப்பை புதுமுக இயக்குநர் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் முறையாக அறிவிக்க இருக்கிறது படக்குழு.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய, 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள ஆடம்பர வீட்டை வாங்கியுள்ளாராம் பிரியங்கா சோப்ரா.  கோப்புப்படம்: ஊடகம்

20 Nov 2019

ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா

‘ஆஹா கல்யாணம்’ என்ற படத்தில் நானியுடன் இணைந்து நடித்த வாணிகபூர். படம்: ஊடகம்

20 Nov 2019

கவர்ச்சி படத்தால் சிக்கலில் சிக்கிய வாணி கபூர்