தடைகளை மீறி ‘பாம்பு சட்டை’ படத்தை வெளியிட முயற்சி

இப்போதெல்லாம் ஒரு படத்தைத் தயாரிப்பதும், அதை திட்டமிட்டபடியே வெளியிடுவதும் குதிரைக் கொம்பாகி விட்டது. திரைத்துறையில் நன்கு அனுபவம் பெற்றவர்கள் கூட எதிர்பாராத சிக்கல் களில் சிக்கிக்கொண்டு படாதபாடு படுகிறார்கள். தயாரிப்பாளராக 'சதுரங்க வேட்டை'யில் அதிரடி வெற்றியை எட்டிய நடிகரும், இயக்குநருமான மனோபாலா, அடுத்து 'பாம்பு சட்டை' தயாரிக்கிறார். பாபி சிம்ஹா நாய கனாகா நடிக்கும் இப்படத்தில் அவ ருக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ். ராக்கெட் வேகத்தில் ஆரம்பித்த படப்பிடிப்பு, ஏனோ சில காரணங்களால் கட்டை வண்டி மாதிரி நொண்டி யடித்தது. பிரபலமான சினிமா விநியோ கிப்பாளரான கே.கங்காதரன் இப்படத் தின் விநியோக உரிமையை வாங்கிய பிறகு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித் திருக்கிறது 'பாம்பு சட்டை'.

"எடுத்த வரையிலான படத்தை எனக்குப் போட்டுக் காட்டினார்கள். புது இயக்குநர் ஆடம்ஸ் மிகச் சிறப் பாக எடுத்திருக்கிறார். அபாரமாக வந்திருக்கும் இப்படம் பாதியிலேயே நின்றுபோய் இருந்தது என் மனதை வருத்தியது. "ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் அவர்களை நம்பி இந்தப் படத்தை தயாரித்திருக்கும் மனோபாலா வுக்கு கை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. அது வுமின்றி, இப்படத்தின் வெற்றியில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. "இதை வெளியிட்டால் நல்ல லாபம் கிடைக்கும் என்கிற எண்ணத்தில் அபினேஷ் இளங்கோவனுடன் இணைந்து நாங்கள் வெளியிடுகிறோம்.

"முதன்முதலாக இப்படத்தின் தயாரிப்பிலும் நாங்கள் பங்குபெறு வதைப் பெரிய கௌரவமாக நினைக்கிறோம். எங்கள் நிறுவனத்தின் எதிர்காலத் தயாரிப்புகளுக்கு 'பாம்பு சட்டை' பலமான அடித்தளமாக அமையும்," என்று நம்பிக்கையோடு சொல்கிறார் கே.கங்காதரன். நடிகர் பாபி சிம்ஹாவைப் பொறுத்த வரையில் அவருக்கு மிகவும் பிடித்த கதை என்பதால் சற்றும் யோசிக்காமல் கால்‌ஷீட் ஒதுக்கியதாகக் கேள்வி. இந்தப் படம் இந்தளவு தாமதத்துக் குப் பிறகேனும் வெளிவர வேண்டும் என்பதற்காக அவரும் தன் பங்கிற்கு மெனக்கெடுகிறார். எனவே படம் வெளியாகும் என நம்பலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!