சிம்பு: இதுவே என் ஆசை

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அச்சம் என்பது மடமை யடா’ படம் விரைவில் திரைகாண உள்ளது. சிம்பு, இயக்குநர் கவுதம் மேனன் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா? “ஆம். ‘அச்சம் என்பது மடமையடா’ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது உண்மைதான். இதில் இயக்குநர் கவுதம் மேனன் புதிதாக ஒரு விஷயம் முயற்சி செய்திருக்கிறார். ஓர் இயக்குநராக அதைச் செய்ய மிகப்பெரிய தைரியம் வேண்டும். இதை அவர் வெற்றிகரமாகச் செய்வார் என்று மிகுந்த நம்பிக்கை வைத்தேன். எங்கள் கூட் டணி இப்படத்திலும் கண்டிப்பாகப் பேசப்படும்.

“இப்படம் வெளியானவுடன் திரைத்துறை யினர், ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. இப்போதெல்லாம் திரைத்துறையினர் ‘புதிது’ என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். இந்த ‘புதிது’ என்பதை உண்மையில் இந்தப் படத்தில்தான் பார்க்கப்போகிறார்கள் ரசிகர்கள். கவுதம் சார் மேற்கொண்டுள்ள புது முயற்சியை ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.” நீங்கள் படப்பிடிப்புக்கு வராததால் படம் தாமதப்படுவதாகக் கூறப்படுகிறதே? “கவுதம் மேனன் ஒரு பிரச்சினையில் இருக்கும் போதுதான் இந்தப் படத்தையே தொடங்கினோம்.

பொதுவாகப் பட வேலைகளில் இருக்கும்போது, தயாரிப்பாளர்களுக்கு வரக் கூடிய வழக்கமான பிரச்சினைதான் அவருக்கும் வந்தது. என் தரப்பில் இருந்து எந்த அளவு உதவி செய்ய முடியுமோ அந்தளவு செய்திருக்கிறேன். “அவர் அளித்த பேட்டியில் என்னைப் பற்றித் தவறாகப் பேசிவிட்டார் என்பதற்காக நானும் அவரைப் பற்றிப் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதெல்லாம் அனைத்து படங்களின் இறுதியிலும் நடக்கக்கூடிய விஷயங்கள்தான். தற்போது எல்லா பிரச்சினையும் சுமுகமாக முடிந்து விரைவில் படமும் வெளியாக இருக்கிறது.”

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்கிறார் நாயகி ராஷ்மிகா. படம்: ஊடகம்

11 Nov 2019

ராஷ்மிகா: கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை

லாக்கப் படக் குழுவினர். படம்: ஊடகம்

11 Nov 2019

அனைவரையும் கவர வருகிறது ‘லாக்கப்’

"விஜய்சேதுபதி மற்றவர்களுக்குத்தான் நாயகன், ஆனால் எனக்கோ அண்ணன்,” என்று நெகிழ்கிறார் இயக்குநர் விஜய் சந்தர்.

11 Nov 2019

‘அண்ணன் ஆன சேதுபதி’