2 படங்களில் நடிக்க மாட்டேன்: சிவா உறுதி

குறிப்பிட்ட இரு படங்களில் நடிக்க தாம் முன்பணம் வாங்கியதாகக் கூறப்படுவதை சிவகார்த்திகேயன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அந்த இரு படங்களிலும் நடிக்கப் போவதில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ‘ரெமோ’ படம் பெரியளவில் வெற்றி பெற்றிருந்தாலும், கல வையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. அப்படத்தின் வெற்றி விழாவில் பேசியபோது, கண்ணீர்மல்க சிவகார்த்திகேயன் தெரிவித்த சில விஷயங்கள் கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில் சம்பள முன் பணம் வாங்காத இரு புதிய படங்களில் நடிக்கும்படி தம்மை வற்புறுத்துவதாக அவர் புகார் எழுப்பியுள்ளார்.

அப்படங்களில் நடிக்க முடியாது என்றும், சட்டப் படி இந்தப் பிரச்சினையை சந் திக்கத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் நடிகர் சங்கத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மனதில் உள்ளதை தெளிவாகவும் திட்டவட்டமாகவும் வெளிப்படுத்தி உள்ளார். “கடந்த 2013ஆம் ஆண்டு என்னிடம் கால்‌ஷீட் கேட்டு தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவிஸ் மதன் ஆகிய 3 பேர் அணுகினார்கள். இதில் ஞானவேல்ராஜா படத்தில் நடிப்ப தற்கு மட்டுமே முறைப்படி ஒப்பந்தம் போடப்பட்டது.

மற்ற இருவரின் படங்களில் நடிக்க வாய்மொழியாகவே பேசப்பட்டது. இதற்காக அவர்களிடம் சம்பளத் துக்கான முன்பணம் எதுவும் நான் வாங்கவில்லை. “இப்போது எனது சந்தை மதிப்பு நிலவரம் உயர்ந்துள்ள நிலையில் அவர்கள் மூன்று பேரும் வந்து தங்கள் படங்களில் நடித்துக் கொடுக்கும்படி வற்புறுத் துகிறார்கள். ஞானவேல்ராஜாவிடம் ஒப்பந்தம் போட்டு இருப்பதால் அவர் படத்தில் நடித்துக் கொடுப்பேன். “ஆனால் மற்ற இருவரின் படங்களிலும் நடிக்க முடியாது. அவர்களிடம் ஒப்பந்தம் எது வும் போடவில்லை. இந்த பிரச்சி னையைச் சட்ட ரீதியாகச் சந்திக் கத் தயாராக இருக்கிறேன்,” என்று சிவகார்த்திகேயன் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்