கவண்: விஜய் சேதுபதி நடிக்கும் புது படத் தலைப்பு

விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இணைந்து கே.வி.ஆனந்த் இயக் கத்தில் நடித்து வரும் புதிய படத்திற்குத் தலைப்பு வைத்துள் ளனர். இந்தப் படத்தில் மடோனா செபஸ்டியான் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இருவரும் வில்லன்களைப் போல் எதிர்மறை வேடங்களை ஏற்றுள்ள னராம்.

இப்படத்திற்குத் தலைப்பு வைக்காமலேயே படக்குழுவினர் காட்சிகளைப் படமாக்கி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இப்படத்தின் தலைப்பை வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். அதன்படி, ‘கவண்’ என்று தலைப்பு வைத் துள்ளனர். ‘கவண்’ (உண்டிக்கோல்) என் பது கிராமங்களில் வயல்வெளி களில் அமரும் பறவைகளை விரட்டுவதற்காகப் பயன்படுத்தும் ஆயுதம் ஆகும். இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவ னம் சார்பில் கல்பாத்தி அகோரம், அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இது அந்நிறுவனம் தயாரிக்கும் 18ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

“டி.ராஜேந்தர் சார் அற்புதமான ஒரு நடிகர். அவருடன் இணைந்து நடிப்பது உற்சாகம் அளிக்கிறது. “இந்தப் படம் குறித்து நான் அதிகம் பேசப்போவது இல்லை. ஆனால் ரசிகர்களுக்கு ரொம்பப் பிடித்தமானதாக இருக்கும்,” என் கிறார் விஜய் சேதுபதி.

‘கவண்’ படக்குழுவினர் ராஜேந்தர், கே.வி.ஆனந்த், விஜய் சேதுபதி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய, 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள ஆடம்பர வீட்டை வாங்கியுள்ளாராம் பிரியங்கா சோப்ரா.  கோப்புப்படம்: ஊடகம்

20 Nov 2019

ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா

‘ஆஹா கல்யாணம்’ என்ற படத்தில் நானியுடன் இணைந்து நடித்த வாணிகபூர். படம்: ஊடகம்

20 Nov 2019

கவர்ச்சி படத்தால் சிக்கலில் சிக்கிய வாணி கபூர்