ஒதுக்கப்பட்ட கவர்ச்சி நடிகை சன்னி லியோன்

விஜய் நடித்து வரும் 'பைரவா' படக்குழு சன்னி லியோனை ஒதுக்கிவிட்டதாம். இப்படத்தின் ஒரு பாடலுக்கு சன்னி லியோனை ஆட வைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர். விஜய்யும் இதற்கு சம்மதித்தாராம். இதற்காக அவரை ஒப்பந்தம் செய்யவும் ஏற்பாடுகள் செய்தனர். ஆனால், சன்னி லியோன் விதித்த சில நிபந்தனைகளால் படக்குழுவினர் அதிர்ந்துபோயினராம்.

ஒரு பாடலுக்கு நடனம் ஆட வருவ தென்றாலும் கூட ஆடை வடிவமைப்பாளர், ஒப்பனை, உதவியாளர்கள் என அவருடன் குறைந்தபட்சம் பத்துப் பேராவது உடன் வருவார்களாம். அவர்கள் அனைவரும் மும்பையிலிருந்து சென்னை வருவதற்கான விமான பயணச் செலவு, சென்னையில் நட்சத்திர விடுதியில் தங்க அறைகள் என அனைத்தும் தயாரிப்பாளரின் செலவு என்று சன்னிலியோன் கூற, சத்தமின்றி திரும்பிவிட்டது 'பைரவா' படக்குழு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!