ரசிகர்களுக்கு சிம்பு தரும் விருந்து

நடிகர் சிம்பு அடுத்தடுத்து தனது ரசிகர்களுக்கு விருந்து தரப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. முதன்முறையாக 3 தோற்றங்க ளில் நடித்துள்ளார் சிம்பு. இப்படத்தில் அவர் ஏற்றுள்ள ‘மதுர மைக்கேல்’, ‘அஸ்வின் தாத்தா’ கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் இப்போதே வரவேற்புப் பெற்றுள்ளன. மேலும் முன்னோட்டக் காட்சிகளும் ஒரே ஒரு பாடலும் விரைவில் வெளியிடப்படும் என சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதுதவிர அவர் நடித்து வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் முன்னோட்டக் காட்சிகளும் வெளியாகப் போகிறது. இந்த நிகழ்வுகள் தனது ரசிகர்களுக்கு அடுத்தடுத்து ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் தரும் என்கிறார் சிம்பு. யுவன் சங்கர் ராஜா-சிம்பு கூட்டணியில் வெளியான ‘லூசு பெண்ணே’, எவன்டி உன்ன பெத்தான்’ பாடல்கள் பெரியளவில் வெற்றி பெற்றவை. அதேபோல் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தின் பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் எப்போதுமே வெளிப்படையாகப் பேசவே விரும்புவேன்,” என்கிறார் பிரியா ஆனந்த். படம்: ஊடகம்

19 Nov 2019

பிரியா: வெளிப்படையாகப் பேசுவதையே விரும்புகிறேன்

கார்த்தி தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘தம்பி’.

19 Nov 2019

அண்ணி ஜோதிகாவுக்கு தம்பியாக கார்த்தி நடிக்கும் படம் ‘தம்பி’

விருதுகள் கலைஞர்களுக்கு மேலும் சிறப்பாக உழைக்கவேண்டும் எனும் ஊக்கத்தைத் தருவதாகச் சொல்கிறார் நடிகை அதிதி ராவ்.  படம்: ஊடகம்

19 Nov 2019

‘விருதுகள் உற்சாகம் தரும்’