கற்பனைக் கதைகள், அறிவியல் ரீதியிலான புத்தகங்கள்தான் இவருக்கு ரொம்பப் பிடிக்குமாம். அவற்றைவிட, தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகங்கள் என்றால் கொள்ளைப் பிரியம் என்கிறார். "மும்பையில் உள்ள என் வீட்டில் ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் வைத்திருக்கிறேன். படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்து சென்னை, ஹைதராபாத் என பறக்கும்போது விமான நிலையத்தில் ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கும்.
எந்த விமான நிலையமானாலும், அங்கே உள்ள பொதுவான ஒரு விஷயம், புத்தக விற்பனை மையம்தான். "சும்மாவேனும் காத்திருக்கும் நேரத்தில் புத்தகம் படிக்கலாமே என்று ஒருமுறை தோன்றியது. அங்கே இருந்துதான் புத்தகங்களை நேசிக்க ஆரம்பித்தேன். ஒரு படத்துக்காக ஐந்தாறு முறை விமானத்தில் பறக்க வேண்டியிருந்தால், ஒவ்வொரு முறையும் குறைந்தது ஆறேழு புத்தகங்கள் வாங்கிவிடுவேன். வீட்டில் உள்ள நூலகம் நிரம்பி வழிகிறது," என்கிறார் பூனம் பாஜ்வா.