சிபிராஜ் ஜோடியாக ரம்யா நம்பீசன்

சிபிராஜ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ரம்யா நம்பீசன். விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர் நடித்துள்ள படம், 'சைத்தான்'. இதை இயக்கியவர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. இவர் அடுத்து இயக்கும் படத்தில் சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். சத்யராஜின் நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தில் சிபிராஜ் ஜோடியாக, ரம்யா நம்பீசன் நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும், ஆனந்த்ராஜ், சதீஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர்.

திகில் படமான இதன் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரம் சென்னையில் தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. இது தெலுங்கில் வெளியான 'க் ஷனம்' படத்தின் மறுபதிப்பு என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், படக்குழு இதை மறுத்துள்ளது. "இது நேரடித் தமிழ்ப் படம்தான். கதைக்குத் தேவைப்பட்டதால் தான் சிபிராஜ் ஒப்பந்தமானார். அதேபோல் ரம்யா நம்பீசனுக்கு ஏற்ற கதாபாத்திரமாக இருந்ததால் அவரையும் ஒப்பந்தம் செய்துள்ளோம்," என்கிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!