யதார்த்தமான படமாக உருவாகி உள்ளது ‘ரங்கராட்டினம்’

‘திட்டக்குடி’ படத்தை இயக்கிய சுந்தரன் தற்போது இயக்கும் புதிய படம் ‘ரங்கராட்டினம்’. கதாநாயகன் மகேந்திரன். நாயகியாக நடிப்பவர் ‌ஷில்பா. இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், முனைவர் கு.ஞானசம்பந்தன், சென்ராயன், வினோதினி, ‘பசங்க’ சிவக்குமார், தவசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.“ராட்டினம் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் ஒரு விளையாட்டு சாதனம்.

அதேபோல் தான் காதலும். காதல் தரும் உற்சாகத்தை இப்படம் சொல்லும். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். “திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம். மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இரண்டு பாடல்களை எழுதி கொடுத்திருந்தார். யதார்த்தமான கதையாக ‘ரங்கராட்டினம்’ படத்தை இயக்கி இருக்கிறேன்,” என்கிறார் சுந்தரன்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், ராதிகா, சரத்குமார், சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

14 Nov 2019

குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்த வருகிறது ‘வானம் கொட்டட்டும்’

நடிக்கத் துவங்கி 12 ஆண்டுகளாகின்றன. இருப்பினும் இப்போதுதான் மனநிறைவு தரும் கதாபாத்திரங்கள் அமைவதாகச் சொல்கிறார் அதிதி ராவ். 

14 Nov 2019

‘பட்டாம்பூச்சிகள் பறக்கும்’