கமலைப் பிரிந்தார் கவுதமி

கடந்த 13 ஆண்டுகளாக நடிகர் கமலுடன் இணைந்து வாழ்ந்து வந்த நடிகை கவுதமி தற்போது அவரை விட்டுப் பிரிவதாகத் தெரிவித்துள்ளார். இது தன் வாழ்க்கையில் தாம் எடுத்த பேரழிவான முடிவு என்று குறிப் பிட்டுள்ள அவர், இருள் சூழ்ந்த வலி யான காலங்களில் தம்மை வழிநடத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள் ளார். கமலும் கவுதமியும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் அண்மைக்காலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந் ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் கமலஹாசனை விட்டுப் பிரிவதாக கவுதமி அறிவித்துள்ளார்.

"நானும் கமல்ஹாசனும் இனி இணைந்திருக்கப்போவதில்லை என் பதைத் தெரிவிக்க நேர்ந்துள்ளதை நினைத்து மனவேதனை அடைகிறேன். 13 ஆண்டுகள் சேர்ந்திருந்த பிறகு என் வாழ்க்கையில் எடுத்த பேரழிவான முடிவாக இதைக் கருதுகிறேன். "மாற்றம் ஒன்றே மாறாதது, மனித வாழ்க்கையிலும் இந்த மாற்றம் ஒவ் வொரு தனி நபருக்குள்ளும் மாற் றத்தை ஏற்படுத்தும் என்பதை எனது வாழ்க்கையின் மூலம் நான் புரிந்து கொண்டேன். "ஒரு குழந்தைக்குத் தாய் என்ற வகையில் சிறந்த தாயாக எனது முதல் தலையாய கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளதை உணர்ந்து அக்கடமையை நிறைவேற்ற எனக்குள்ளே சமாதானம் தேவை என்பதை அறிந்து, எந்தப் பெண்ணும் எடுக்க முன்வராத மிகவும் சிரமமான முடிவாகவும், எனக்குத் தேவையான முடிவாகவும் இது தெரிகிறது.

திரைத்துறை நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன், கவுதமி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!