‘தர்மதுரை’க்கு குவியும் பாராட்டு: இயக்குநர் மகிழ்ச்சி

பல்வேறு தரப்பினரின் பாராட்டு களைப் பெற்ற 'தர்மதுரை' படம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலி னுடைய பாராட்டையும் பெற்றுள் ளது. இதனால் இயக்குநர் சீனு ராமசாமி கூடுதல் உற்சாகத்தில் மிதக்கிறார். விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளிவந்த இப்படம் 50 நாட்களைக் கடந்து இன்றும் சில திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, இப்படத்தை பாமக தலைவர் ராமதாஸ், விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகி யோர் பார்த்துப் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழக எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் அண் மையில் இயக்குநர் சீனு ராமசா மிக்கு நான்கு பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 'தர்மதுரை'யை மனதாரப் பாராட்டி யுள்ளார். இப்படத்தில் தனக்குப் பிடித்த காட்சிகளையும் பாத்திரங்க ளையும் அவர் குறிப்பிட்டுள்ளார். "இதுவரை சமூக நோக்கம் கொண்ட படங்களை எடுத்து வந்த சீனு ராமசாமி, 'தர்மதுரை' யிலும் பல சமூக மாற்றங்களை வலியுறுத்தும் வகையில் படத்தை உருவாக்கியுள்ளார். காதலில் தோற்றுப்போன ஓர் ஆணும், திருமண வாழ்வில் தோற்று, விவாகரத்தான ஒரு பெண்ணும், புதிதாக இணைந்து வாழும் வாழ்க்கை முறையை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இப்படத்தில் எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. இதை ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.

'தர்மதுரை' படத்தின் ஒரு காட்சியில் விஜய் சேதுபதி, தமன்னா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!