34 ஆண்டுகளுக்குப் பின் தயாராகும் இரண்டாம் பாகம்

முப்பத்து நான்கு வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘மணல் கயிறு.’ இதன் இரண்டாம் பாகம், ‘மணல் கயிறு 2’ என்ற பெயரில் தயாராகிறது. இதில் விசு, எஸ்.வி.சேகர், சூரியகோஸ் ரங்கா ஆகிய மூவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்கள் மூன்று பேருமே முதல் பாகத்திலும் நடித்திருந்தனர். இரண்டாம் பாகத்தில் எஸ்.வி.சேகரின் மகனாக அஸ்வின் சே க ரு ம் , சூரியகோஸ் ர ங் கா வி ன் ம க ளா க பூ ர் ணா வு ம் நடிக்கிறார்கள். இவர்களுடன் சாமிநாதன், சாம்ஸ், ஜெகன், ஜார்ஜ் ஆகியோரும் உள்ளனர். நா.முத்துக்குமார் பாடல்களை எழுத தரண் இசையமைத்துள்ளார். விசுவின் மூலக்கதைக்கு எஸ்.வி.சேகர் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளாராம்.

‘யாருடா மகேஷ்’ படத்தை இயக்கிய மதன்குமார் இப்படத்தை இயக்குகிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.ராமசாமி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. “இன்று சமுதாயத்தில் பெண்களுக்கு பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். மாறாக, அளவுக்கு அதிகமானால் என்ன நடக்கும், அளவோடு இருந்தால் வாழ்க்கை எப்படி அமையும் என்பதைச் சொல்லும் கதை இது,” என்கிறார் மதன்குமார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்