எழுத்தாளர் விழாவில் ‘தீபன்’ திரைப்படம்

கான் அனைத்துலகத் திரைப்பட விழாவில் கடந்த ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப்பனை) விருது வென்ற ‘தீபன்’ திரைப்படம் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் திரையிடப் படுகிறது. நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை 6/11/2016, பீச் ரோடு கோல்டன் மைல் டவரில் உள்ள தி புரொஜெக்டரில் (The Projector, Redrum) பிற்பகல் 3 மணிக்கு திரைப்படம் திரையிடப்படும். விழா நுழைவு அட்டையைப் பயன்டுத்தி திரைப்படத்துக்குச் செல்லலாம். பிரபல பிரெஞ்சுத் திரைப்பட இயக்குநர் ஷாக் அவ்தியா(த்) இயக்கிய இந்தப் படம், பிரான்ஸ் நாட்டுக்கு அகதியாகக் குடியேறும் மூன்று ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை பின்னணியாகக் கொண்டது.

இலங்கை உள்நாட்டுப் போரி லிருந்து தப்பிக்கும் முன்னாள் ராணுவ வீரன், ஓர் இளம்பெண், ஒரு சிறுமி மூவரும் பாரிஸில் தஞ்சமடைய ஒரு குடும்பமாக நடிக்க முற்படுகின்றனர். மூவரும் இணைந்து புதிய ஒரு வாழ்க்கையைத் துவங்க முயல்வதே ‘தீபன்’ திரைப்படத்தின் கதை. குடியேறிய அந்நிய நாட்டில் அந்நிய சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தத் திரைப்படம் விவரிக்கிறது.

ஒருவகையில் தனது சொந்த வாழ்வின் போராட்டங்களின் பெரும்பகுதியை இந்தத் திரைப் படத்தின் கதாநாயகன் தீபன் பாத்திரம் சித்திரிப்பதாக இந்தத் திரைப்படத்தில் தீபனாக நடித் திருக்கும் ஷோபா சக்தி தெரிவித்திருந்தார். இதில் முதன்மை கதா பாத்திரங்கள் மூவருமே பெரும் பாலும் தமிழிலேயே பேசுவது போல படம் அமைந்துள்ளது குறிப் பிடத்தக்கது. புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத் தமிழ் அகதிகள் சந்திக்கும் புறச் சூழல் சார்ந்த பிரச்சினைகளையும் அகச்சூழலில் அவர்கள் எதிர் கொள்ளும் அலைக்கழிப்புகளை யும் மனப்போராட்டங்களையும் பேசக்கூடிய முதல் ஐரோப்பிய திரைப்படம் ‘தீபன்’ என்று பரவலாகப் பார்க்கப்படுகிறது.

‘தீபன்’ திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியில் எழுத்தாளர் ஷோபாசக்தி (வலது). படம்: இணையம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழில் வெளியாகும் சில படங்கள் தம்மைப் பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார் க‌ஷ்மீரா. படம்: ஊடகம்

13 Nov 2019

கஷ்மீரா: தமிழ் சினிமாவில் அன்பு பாராட்டுகிறார்கள்

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வழி கலந்துரையாடிய நடிகை நிவேதா தாமஸ் தற்போது அதற்காக வருந்துவதாகத் தகவல். படம்: ஊடகம்

13 Nov 2019

கண்ணியம் தேவை: நிவேதா கோபம்