திருமணத்தை விரும்பாத சாய் பல்லவி

‘பிரேமம்’ மலையாளப் படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடித்தவர் சாய் பல்லவி. இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தமிழகத்தைச் சேர்ந்த இவர் இப்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ரசிகர்களுடன் டுவிட்டர் தளம் வழி கலந்துரையாடினார் சாய் பல்லவி. அப்போது ஒரு ரசிகர், காதல், திருமண வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்ப, தயக்கமின்றி அதற்குப் பதிலளித்தார்.

“நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். ஏனென்றால் என் பெற்றோரை எப்போதும் கவனித்துக் கொள்ள விரும்புகிறேன்,” என்பதே சாய் பல்லவியின் பதில். ‘ரெமோ நீ காதலன்...’ பாடல் பிடிக்கும். சூர்யாவின் படங்களில் பிடித்தது ‘காக்க காக்க’ என்றும் கூறியுள்ளார். உங்களுக்குப் பிடித்தது கோழிப் பிரியாணியா? மட்டன் பிரியாணியா? என்ற ரசிகரின் கேள்விக்கு ‘நான் சைவம்’ என்று கூறி இருக்கிறார் சாய் பல்லவி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்