விவேக்: வதந்திகளைப் பரப்பவேண்டாம்

சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பவேண்டாம் என்று நடிகர் விவேக் பேசினார். ‘ரம்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் ரி‌ஷிகேஷ்– சஞ்சிதா ஷெட்டி ஜோடியாக நடித்து உள்ளனர். சாய் பிரசாத் இயக்கி உள்ளார். விவேக், நரேன், மிய ஜார்ஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கலந்துகொண்டு பேசினார். “சமூக வலைத்தளங்களில் பரப்பு வதற்கு நிறைய நல்ல விஷயங்கள் உள்ளன. கலவரங்களையோ வதந்தி களையோ பரப்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.” என்றார் விவேக்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், ராதிகா, சரத்குமார், சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

14 Nov 2019

குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்த வருகிறது ‘வானம் கொட்டட்டும்’

நடிக்கத் துவங்கி 12 ஆண்டுகளாகின்றன. இருப்பினும் இப்போதுதான் மனநிறைவு தரும் கதாபாத்திரங்கள் அமைவதாகச் சொல்கிறார் அதிதி ராவ். 

14 Nov 2019

‘பட்டாம்பூச்சிகள் பறக்கும்’