‘புரட்சியை உண்டு பண்ண காதலால் மட்டுமே முடியும்’

காதலால் மட்டுமே சமூகத்தில் புரட்சியை உண்டு பண்ண முடியும் என இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்திருக்கிறார். விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாவீரன் கிட்டு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நடிகர் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, சுசீந்திரன், பா. ரஞ்சித், இசை யமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசினார்.

“இன்றைய கிராமங்களில் பொதுப்பயன்பாட்டிற்குள் இருக்கிற அரசு பொதுவுடைமை என்ன வாயிருக்கிறது? யாருடைய சொந்தமாயிருக்கிறது? என்கிற ஒரு கேள்வியிருக்கிறது. அந்தக் கேள்விக்கு இந்தப் படம் நிச்சயமாக ஒரு பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன் . “இந்த ‘காதல்’ இருக்கிறதே அது சும்மாயிருக்காது. ‘மாவீரன் கிட்டு’ படத்தில் வரும் இந்த வசனம் கண்டிப்பாக சலசலப்பை உண்டுபண்ணும். ‘காதல்’ இந்த சமூகத்தை மாற்றியே தீரும். சமூகத்தில் காதலால் மட்டுமே புரட்சியை உண்டு பண்ண முடியும் என்கிற நம்பிக்கை உண்டு.

‘மாவீரன் கிட்டு’ படத்தில் ஒரு காட்சி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கதிர் நாயகனாக நடித்துள்ள படம் ‘ஜடா’. இவருடன் இணைந்து ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். படம்: ஊடகம்

17 Nov 2019

புதிய அனுபவத்தை தர வருகிறது ‘ஜடா’

விக்ரம் மகன் துருவ், பனித்தா சந்து. படம்: ஊடகம்

17 Nov 2019

‘ஆதித்ய வர்மா’வுக்கு ‘ஏ’ சான்றிதழ்

நயன்தாராவின் தீவிர ரசிகை என்கிறார் ரகுல் பிரீத்சிங்.

17 Nov 2019

நயன்தாராவைப் பாராட்டும் இளம் நாயகி