ஆனந்தி விலகல்: நழுவுகிறார் அதர்வா

அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா தயாரிக்க அதர்வா நடிக்கும் படத் துக்கு வித்தியாசமான தலைப்பு வைத்திருக்கிறார்கள். அது, ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’. இதில் அதர்வாவுக்கு நான்கு கதாநாயகிகளாம். ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, பிரணீதா, ‘கயல்’ ஆனந்தி என்று நான்கு பேர் நடிப்பதாகக் கூறப்பட்டது. ‘கயல்’ ஆனந்தி ஏற்கெனவே ‘சண்டிவீரன்’ படத்தில் அதர்வா வுக்கு ஜோடியாக நடித்தவர்தான்.

ஆனால் என்னவென்று தெரிய வில்லை, முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஆனந்தி விலகிவிட்டார். பிறகென்ன, கதாநாயகனான அதர்வாவோடு ஆனந்திக்கு ஏதோ பிரச்சினை என்று கிசுகிசு கிளம்பிவிட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த அதர்வா, “எனக்கும், ஆனந்தியின் விலக லுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை. நான் நாயகனாக நடிக்கிறேன், அவ்வளவுதான்,” என்கிறார்.

‘சண்டிவீரன்’ படத்தில் அதர்வா, ஆனந்தி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வழி கலந்துரையாடிய நடிகை நிவேதா தாமஸ் தற்போது அதற்காக வருந்துவதாகத் தகவல். படம்: ஊடகம்

13 Nov 2019

கண்ணியம் தேவை: நிவேதா கோபம்

படப்பிடிப்பின்போது சக நடிகையை அடிக்க நேர்ந்ததற்காக மன்னிப்புக் கோரியுள்ளார் நடிகர் விஷால். 

13 Nov 2019

மன்னிப்பு கோரிய விஷால்