“உண்மையான உழைப்பாளி”

விஷால் நடிக்கும் படங்கள் என்றாலே வழக் கமாக அதிரடி சண்டைகள் நிறைந்திருக்கும். ஆக்ஷன் நாயகனாகப் பெயர் பெற்றுள்ள அவரை நகைச்சுவை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் சுராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவை சார்ந்த படங்கள் பெரியளவில் பேசப்பட்டவை. இந்நிலையில், விஷால், தமன்னா, வடிவேலு, சூரி எனப் பல முன்னணிக் கலைஞர்களுடன் கூட்டணி அமைத்து 'கத்தி சண்டை'யை உருவாக்கியுள்ளார் சுராஜ்.

மனிதர், நகைச்சுவை என்ற அம்சம் இன்றி தன்னால் ஒரு கதையை கற்பனை செய்யவே முடியாது என்கிறார். "அதிரடி பாதையில் போய்க் கொண்டிருந்த விஷால் முழுக்க நகைச்சுவையை நம்பி ஒரு படத்தில் நடிக்க முன்வந்ததே இல்லை. அதேபோல், படத்தில் இன்னொரு நகைச்சுவை நடிகர் இருந்தால் அவ்வளவு சீக்கிரம் ஒப்புக் கொள்ள மாட்டார் பங்காளி வடிவேலு. 'உங்களை நம்பி உள்ளே வர்றேன் அண்ணே' என்று சொல்லிவிட்டுதான் சூரி நடிக்க முன்வந்தார். துறுதுறு என்று ஒரு நாயகியைத் தேடியபோது தமன்னாவின் நினைவு வந்தது.

இப்படி அனைவரையும் ஒன்று சேர்த்ததே பெரிய கத்திக்குத்துக் கதையாகிவிட்து," என்று மெல்லிய புன்னகையுடன் விவரிக்கிறார் சுராஜ். சரி... விஷால், தமன்னா, சூரி என்று இணைந்த இந்தக் கூட்டணிக்குள் வடிவேலு எப்படி வந்தார்? இந்தக் கேள்விக்கு விஷாலிடம் இருந்தே பதில் வருகிறது. "இதற்கு முன் 'அப்பா டக்கர்' படத்தை சுராஜ் எடுப்பதற்கு முன்பே என்னிடம் சொன்ன கதை இது. 'நன்றாக உள்ளது,' என்று உடனே சொன்னேன். ஆனாலும் அடுத்தடுத்து 'பாயும்புலி', 'மருது' என பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தேன். சுராஜும் அவரது பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!