செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் சதுரங்க வேட்டை 2

மனோபாலா தயாரித்த படம் சதுரங்க வேட்டை. நட்டி, இஷாரா நடித்த இந்தப் படத்தை எச்.வினோத் இயக்கியிருந்தார். படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்போது இதன் இரண்டாம் பாகத்தை மனோபாலாவே தயாரிக்கிறார். சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்தில் அரவிந்த்சாமி, திரிஷா நடிக்கிறார்கள். முதல் பாகத்தை இயக்கிய எச். வினோத் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார். அவரது உதவியாளர் என்.வி. நிர்மல் குமார் இயக்குகிறார். அஸ்வமித்ரா இசை அமைக்கிறார்,

அறிவுமதி, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார்கள். கே.ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். காதலர்களான அரவிந்த்சாமியும் திரிஷாவும் எப்படி மக்களை விதவிதமாக ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. கொஞ்சம் 'ஹாலிவுட்' வாசனையுடன் நம் மண் வாசனையும் கலந்து உருவாகும் படம். இதன் முதல் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டது. இதில் அரவிந்த்சாமியும் திரிஷாவும் மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வீசி எறிவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இது இன்றைய போக்கை பிரதிபலிப்பது போன்று அமைந்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!