ரசிகருக்கு கிடைத்த நூதன தண்டனை

நடிகைகளை ரசிகர்கள் ஆர்வமாகப் பார்த்து மகிழ்வதும், பின் தொடர்வதும் புதிது அல்ல. சில நடிகைகள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. சிலர் சுதந்திரமாக நடமாட முடியவில்லையே என்று நொந்துகொள்வது உண்டு. இதில், இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் புதுவிதம். இவரை அண்மையில் இளைஞர் ஒருவர் தொடர்ந்து சென்றுள்ளார். ஷ்ரத்தா எங்கு சென்றாலும் ஒரே நாளில் 17 முறை அந்த வாலிபர் இவர் பின்னால் தொடர்ந்து இருக்கிறார்.

இதைத் தடுக்க என்ன வழி என்று யோசித்தாராம் ஷ்ரத்தா. இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றுள்ளார். அவர் எதிர்பார்த்தது போலவே அங்கேயும் அந்த வாலிபர் வந்து நின்றார். உடனே அவரை மேடைக்கு வரும்படி அழைத்த ஷ்ரத்தா, இளைஞர் மேடையேறியதும், “இவர் ஒரே நாளில் என்னை 17 தடவை பின் தொடர்ந்தார்,” என்று கூறி ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அத்துடன் விடவில்லை. யாரும் எதிர்பாராத நிலையில் திடீர் என்று அந்த வாலிபரைக் கட்டிப்பிடித்தார். இதனால் அவர் எதுவும் சொல்ல முடியாமல் வெடவெடத்துப் போனார். இந்த சம்பவம் இந்தி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், ராதிகா, சரத்குமார், சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

14 Nov 2019

குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்த வருகிறது ‘வானம் கொட்டட்டும்’

நடிக்கத் துவங்கி 12 ஆண்டுகளாகின்றன. இருப்பினும் இப்போதுதான் மனநிறைவு தரும் கதாபாத்திரங்கள் அமைவதாகச் சொல்கிறார் அதிதி ராவ். 

14 Nov 2019

‘பட்டாம்பூச்சிகள் பறக்கும்’