தணிக்கை குழுவுக்கு எஸ்.வி.சேகர் கேள்வி

'கபாலி' படத்திற்கு எந்த அடிப் படையில் 'யு' சான்றிதழ் அளிக் கப்பட்டது? என்று தணிக்கை குழுவிடம் நடிகர் எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார். எஸ்.வி.சேகர் நடிப்பில் விசு இயக்கிய படம் 'மணல் கயிறு'. இப்படம் தற்போது எஸ்.வி.சேகர் மகன் அஸ்வின் சேகர் நடிக்க, 'மணல் கயிறு' இரண்டாம் பாக மாக உருவாகியிருக்கிறது. இப் படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலை யில், அண்மையில் தணிக்கை குழுவிற்கு திரையிட்டு காண்பிக் கப்பட்டது.

அதன் பின்னர் 'யுஏ' சான் றிதழ் அளிப்பதாக தணிக்கைக் குழு அறிவிக்க, அதிருப்தி யடைந்துள்ளார் சேகர். எனினும் தணிக்கைக் குழு இதற்கான காரணத்தை விவரித் துள்ளது. ஆனால் எஸ்.வி.சேகர் சமாதானம் அடையவில்லை. "ஒரு காட்சியில் 'பிகர்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாக வும் ஆணுறையைக் காட்டிய தாகவும் கூறுகிறார்கள். 'பிகர்' என்பது கெட்டவார்த்தை என்று எந்த அகராதியில் இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் எஸ்.வி.சேகர்.

'மணல்கயிறு 2' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!