விஷால்: களமிறங்குவது உறுதி

தயாரிப்பாளர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் நடிகர் விஷால். இந்த அறிவிப்பு திரையுலகில் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப் பைத் தொடர்ந்து பத்திரிகையாளர் களைச் சந்தித்துப் பேசினார் விஷால். "தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கியத்தை ஊடகங் கள் வாயிலாகத்தான் அறிந் தேன். எனக்கு இன்னும் அதற்கான கடிதம் வரவில்லை. எப்போதும் எந்த ஒரு சங்கத்தில் இருந்து கடிதம் அனுப்பும்போது முதலில் சம்பந்தப்பட்ட நபர் களுக்கு கடிதம் அனுப்பி விட்டுத்தான் பின்னர் ஊடகங் களுக்கு அனுப்புவார்கள். "போண்டா, பஜ்ஜி சாப்பிட் டுக்கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தினர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்று நான் ஒரு வார இதழுக்குப் பேட்டி அளித்துள்ளேன் என்று கூறுகிறார் கள்.

"போண்டா, பஜ்ஜி என்பது கெட்ட வார்த்தையா? அது ஒரு தவறான உணவும் இல்லை. நடிகர் சங்கக் கூட்டம், படப் பிடிப்புகளில் நாங்கள் அதைத்தான் சாப்பிடு கிறோம். என்னைப் பொறுத்தவரை சின்ன தயாரிப்பாளர்கள் பெரிய தயாரிப்பாளர்கள் என்று பிரித்துப் பார்க்காமல் அனைவருக் காகவும் குரல் கொடுப்போம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!