‘மணல் கயிறு’ உருவான கதை: விவரிக்கும் சேகர்

'மணல் கயிறு' படம் உருவான கதையே ஒரு சிறிய வரலாறு என்று அதன் பின்னணியை விளக்குகிறார் எஸ்.வி.சேகர். "என்னுடைய 'மகாபாரதத்தில் மங்காத்தா' நாடகத்தின் நூறாவது பகுதி அரங்கேறியபோது இயக்கு நர் கே.பாலசந்தரும் விசுவும் அதைக் காண வந்திருந்தார்கள். நாடகத்தைப் பார்த்த கே.பாலசந்தர் சற்றே கடுமையாக விமர்சித்தார். "என்ன நாடகம் இது? சேகர் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க, மற்ற பாத்திரங்கள் மட்டும் நடித்துக் கொண்டிருக்க, இது என்ன கதா காலட்சேபமா? என்று கேட்டார்.

"உடனே எங்கள் குழுவில் இருந்த ஒருவர், 'இதைப் போன்று விசுவால் ஒரு நகைச்சுவை நாட கம் அரங்கேற்க முடியுமா?' என சவால் விடப் போய், உடனே விசு வும் 'மோடி மஸ்தான்' என்ற நகைச்சுவை நாடகத்தை அரங் கேற்றி, அது வெற்றி பெற்று, நாள டைவில் அதை 'மணல் கயிறு' என்ற தலைப்பில் திரைப்படமாக விசுவே இயக்கினார். அதை பால சந்தர் தயாரித்தார். இப்படித்தான் 'மணல் கயிறு' உருவானது," என்கிறார் எஸ்.வி.சேகர்.

'மணல் கயிறு' 2ஆம் பாகத்தில் அஷ்வின் சேகர், பூர்ணா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!