முன்னாள் கணவரை ஏசும் மஞ்சுவாரியர் தனது மகளைப் பொய் சொல்ல வைத்து திலீப் இரண்டாவது திருமணம்

செய்துகொண்டார் என்று மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சுவாரியர் குற்றம்சாட்டி உள்ளார். மஞ்சு வாரியரும் நடிகர் திலீப்பும் காதலித்து திருமணம் செய்தனர். அவர்களுக்கு மீனாட்சி என்ற 16 வயது மகள் இருக்கிறாள். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாகத் திலீப்பும் மஞ்சுவாரியரும் பிரிந்தனர். இதையடுத்து, நடிகை காவ்யா மாதவனை அண்மையில் திருமணம் செய்துகொண்டார் திலீப். இவர்களிடையே ஏற்கெனவே நெருக்கம் இருந்தது. இதனால்தான் மஞ்சுவாரியர் திலீப்பை விட்டுப் பிரிந்தார் என்று கூறப்பட்டது.

ஆனால் திலீப் அளித்த பேட்டியில், “என் மகள் விரும்பியதால்தான் காவ்யா மாதவனைத் திருமணம் செய்துகொண்டேன்,” என்று கூறி இருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மஞ்சுவாரியர், “திலீப் கூறுவதில் உண்மை இல்லை. அவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்வதற்காக என் மகள் மீனாட்சியைப் பொய் சொல்ல வைத்து விட்டார்கள். திலீப் எப்பொழுதுதான் நடிப்பார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘பிகில்’ படத்தில் நடித்து முடித்ததும் கால்பந்து தொடர்பான அனைத்தும் அத்துபடியாகிவிட்டது,” என்கிறார் வர்ஷா.

12 Nov 2019

விஜய்யை ரசித்த வர்ஷா

‘’இருட்டு’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

12 Nov 2019

துரை: என்னை பிரமிக்கவைத்தார் சுந்தர்.சி

தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்கிறார் நாயகி ராஷ்மிகா. படம்: ஊடகம்

11 Nov 2019

ராஷ்மிகா: கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை