அனைவரையும் கவர வருகிறது ‘கொஞ்சம் கொஞ்சம்’

புதுமுக நடிகர் கோகுல் கதாநாயகனாக நடிக்கும் படம் 'கொஞ்சம் கொஞ்சம்'. இவருக்கு ஜோடியாக நடிகை நீனு நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் உதய்சங்கரன். "நாயகி நீனு மும்பையைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்குச் சென்று அங்கு இரும்புக் கடை வைத்து வாழ்க்கையில் முன்னேறும் இளைஞராக அப்புக்குட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கே.வி.ஆனந்த், 'காக்காமுட்டை' மணிகண்டனிடம் பணியாற்றிய பி.ஆர்.நிக்கி கண்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அனைத்துக் கட்டப் படப்பிடிப்பும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள முக்கிய பகுதிகளில் நடைபெறுகிறது. வித்தியாசமான கதையமைப்போடு, காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் கலந்து அனைத்து வகையான ரசிகர்களையும் கவரக்கூடிய ஜனரஞ்சகமான படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்," என்கிறார் உதய்சங்கரன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!