கஸ்தூரிராஜா: எவனோ ஒருவன் என் மகனை அவன் மகன் என்கிறான்

எவனோ ஒருவன் தனுஷை என் மகன் என்று சொந்தம் கொண்டாடுகின்றான், இதைக் கேட்பதற்கே மிகவும் வேதனை யாக உள்ளது என்று தனு‌ஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், தனுஷ் தங்களின் மகன் கலையரசன் என்றும் சின்ன வயதில் காணாமல் போய்விட்ட தாகவும் அவன்தான் இப்போது இருக்கும் நடிகர் தனுஷ் என்றும் தெரிவித்துள்ளனர். 'மன்மத ராசா மன்மத ராசா' பாடலுக்கு தனுஷ் போட்ட குத் தாட்டத்தைப் பார்த்து தங்களது பக்கத்து வீட்டுக்காரர்கள் அடை யாளம் கண்டுபிடித்து கூறிய தாகவும் தெரிவித்துள்ள கதி ரேசன்-மீனாட்சி தம்பதியர், நாங்கள் இப்போது மிகவும் கஷ்டப்படுகிறோம், எங்களுக்குத் தனுஷ் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று மதுரை மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இது திரையுலகினர் இடையே குறிப்பாக தனுஷ் குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. ஆனால் கஸ்தூரி ராஜா இதை மறுத்து வந்தார். இதற்கிடையே புதுமுகங்கள் நடிப்பில், வாசவி பிலிம்ஸ் சார்பில் மாதவன் தயாரித்துள்ள 'பார்க்கத் தோணுதே' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கஸ்தூரி ராஜா தனுஷ் பற்றி எழுந்துள்ள சர்ச்சைக்கு விளக்கம் அளித்துப் பேசினார். "பார்க்கத் தோணுதே' என்கிற இந்தப் படத்தின் தலைப்பைப் பார்க்கும்போது எனக்கு நான் காதலித்த காலம் நினைவுக்கு வருகிறது. காதல் இல்லாதவன் கலைஞனே கிடையாது. சிறு வயதில் தாலாட்டிய அம்மாவைப் பார்க்கத் தோணுது, தோளில் சுமந்த அப்பாவைப் பார்க்கத் தோணுது, பள்ளி நண்பனைப் பார்க்கத் தோணுது, காதலியைப் பார்க்கத் தோணுது. ஆமாம், காதலியைப் பார்க்கத் தோணுது. சத்தியமாக நான் ஒரே ஒரு பெண்ணைத்தான் காதலித்தேன். ஆனால் திருமணம் செய்யவில்லை.

இது என் மனைவிக்கும் தெரியும். "நடிகர் தனுஷ் எனது மகன் தான். இதில் சந்தேகம் இல்லை. நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அப்போது எனக்கு 4,000 ரூபாய்தான் சம் பளம் கிடைத்தது. குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந் தது. எங்களுக்குச் செல்வ ராகவனும் தனு‌ஷும் மகன்களாகப் பிறந்தார்கள். ஒரு மகளும் உள் ளார். செல்வராகவனுக்கு நடிக்க ஆசை இருந்தது. ஆனால் அவர் இயக்குநராகி விட்டார். "தனு‌ஷுக்கு நடிப்பில் விருப்பம் இல்லை. பள்ளியில் தனுஷ் படித்துக்கொண்டு இருந்தபோது 'துள்ளுவதோ இளமை' படத்தை எடுக்கத் தயாரானேன். அந்தப் படத்தில் தனுஷை நடிக்க வைக்க முடிவு செய்தேன். தனு‌ஷிடம் அதில் நடிக்கும்படி கேட்டபோது எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று சொல்லி ஒதுங்கினார். ஆனாலும் வற்புறுத்தி அந்தப் படத்தில் நடிக்கவைத்தேன். "சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் வாழ்க்கையில் இருந்த சந்தோஷம் இப்போது இல்லை. பெயர், புகழ், பணம் எல்லாம் வந்து விட்டது. "ஆனாலும் அப்போதைய மகிழ்ச்சி இப்போது இல்லை. யாரோ ஒருத்தர் தனுஷை எனது மகன் என்கிறார். தனுஷ் எனது மகன். என்னுடைய மகனேதான்," என்று கஸ்தூரி ராஜா பேசினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!